Home » சென்னை » தி.நகரில் 3 நாளில் கடைகள் திறப்பு

தி.நகரில் 3 நாளில் கடைகள் திறப்பு

சென்னை, ஜூன் 5:சென்னை தியாகராய நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடம் அருகே உள்ள கடைகள் அனைத்தும் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் கூறியுள்ளார். இது குறித்து சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது வருமாறு:

சென்னை சில்க்ஸ் விபத்து பகுதியில் யாருக்கும் காயம் நேராமல் அங்கு 50 மீட்டர் சுற்றளவில்பாதுகாப்பு வசதி செய்துள்ளோம். இடிப்பு பணிகள் முடிந்த பிறகு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அருகில் உள்ள கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். அது விபத்து என பதியப்பட்டாலும் தடயவியல் நிபுணர்களின் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கத்தில் பிடிபட்ட ரூ. 40 கோடி செல்லாத பணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட் டுள்ளது. வடபழனி தீவிபத்தில் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் புகார் அளித்தால் ஒப்புகை சீட்டு வழங்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது. 4 பேர் பலியான வடபழனி தீவிபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செல்போன் திருடும் குற்றவாளிகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பைக் ரேஸ், அனுமதியில்லாத லாட்டரி, குட்கா, மாவா விற்பனை தொடர்பாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை உண்டு. சென்னையில் மே 17 நினைவு தின போராட்டத்தில் பேருந்து மீது தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட 4 பேர்மீது மட்டுமே குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்தோம். மெழுகுவர்த்தி ஏந்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இனி போராட்டம் நடத்துபவர்களுக்கு மேலும் இடம் கண்டறியப்படும். இவ்வாறு கமிஷனர் பத்திரிக்கையா ளர்களுடனான சந்திப்பில் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*