Home » சினிமா » சங்கமித்ராவில் ஹன்சிகா

சங்கமித்ராவில் ஹன்சிகா

மறைந்த இயக்குனர் ராம.நாராயணன் மகனான முரளி சங்கமித்ரா படத்தை தயாரிக்க உள்ளார். சில லட்சங்களில் படம் எடுத்து பல கோடி சம்பாதித்தவர் ராம.நாராயணன். சங்கமித்ரா அந்த நிறுவனத்தின் 100-வது படம் என்பதால் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டிருந்தார். தற்போது அந்த நிறுவனம் அட்லி இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில் சங்கமித்ரா படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். இந்த படத்தில் முதலில் சூர்யா, தீபிகா படுகோன் இணைந்து நடிப்பதாக இருந்தது. அவர்கள் சில காரணங்களால் மறுக்க ஆர்யா, ஜெயம்ரவி, ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். சுந்தர்.சி இப்படத்தை இயக்க உள்ளார்.தனக்கு படத்தின் ஸ்கிரிப்ட் தரவில்லை என்று குற்றஞ்சாட்டி ஸ்ருதிஹாசன் நேற்று முன்தினம் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் இது குறித்து படக்குழு அளித்த விளக்கத்தில், நாங்கள்தான் படத்திலிருந்து நீக்கினோம். படத்தில் நடிக்கும் அனைவருக்கும் கதை தெரியும். ஸ்ருதிஹாசன் விலகலுக்கு கூறும் காரணங்கள் தவறானவை. இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் வேறு நடிகை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் சுந்தர்.சிக்கும் ஹன்சிகாவுக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதால் அவர் சங்கமித்ராவில் நாயகியாக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இது வரலாற்று படம் என்பதால் தமிழ உச்சரிப்புக்கள் ஹன்சிகாவுக்கு அவ்வளவாக வராது என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. ஓரிரு நாளில் கதாநாயகி பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*