மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=46186
Export date: Wed Mar 20 21:13:06 2019 / +0000 GMT

அதிமுக - தமாகா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை, மார்ச் 13: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன்படி தமாகாவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி உடன்பாடு நிறைவடைந்தது. இதன் மூலம் அதிமுக 20 இடங்களில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

அதிமுக அணியில் பாமக-7, பிஜேபி - 5, தேமுதிக - 4, என்ஆர் காங்கிரஸ், தமாகா, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Post date: 2019-03-13 11:29:21
Post date GMT: 2019-03-13 11:29:21

Post modified date: 2019-03-13 11:29:21
Post modified date GMT: 2019-03-13 11:29:21

Export date: Wed Mar 20 21:13:06 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com