w
Home » அரசியல் » புதுவை முதல்வர் மீது அதிமுக பரபரப்பு புகார்

புதுவை முதல்வர் மீது அதிமுக பரபரப்பு புகார்

சென்னை, மார்ச்12: தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி, புதுவை முதல்வர் நாரயாணசாமி நிவாரண நிதி வழங்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக புகார் அனுப்பியுள்ளது.

இது குறித்து மத்திய தேர்தல் ஆணையத்துக்கு, புதுச்சேரி அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் நாடு முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். இலவசங்கள், நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், புதுவையில் முதல்வர் நிவாரண நிதி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் களுக்கு பணம் வழங்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் முன் தேதியிட்ட காசோலைகள் புதுவையில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத நிலையிலும், இந்த காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. நிவாரண நிதி கணக்கில் தேவையான நிதி வந்தவுடன் இந்த காசோலைகளை யாருக்கும் தெரியாமல் வங்கியில் செலுத்தி பணம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் நிவாரண நிதி வழங்குவதை யாரும் தடுக்க முடியாது. ஆனால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு நிவாரண நிதி வழங்குவது நிறுத்தப்பட வேண்டும்.எ
னவே, தேர்தல் ஆணையம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கார்கள் ஒப்படைப்பு

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதையடுத்து, புதுவை அமைச்சர்கள் தங்களது அரசு கார்களை தேர்தல் கமிஷனில் ஒப்படைத்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, புதுவை முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், அரசியல் விளம்பரங்கள், அழிக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளதால், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் கடிதம் பெற்று அவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்துவந்த 600 பேரை தாங்கள் முன்னதாக பணிபுரிந்த துறைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*