w
Home » Flash News » 56 பேருக்கு புத்தாண்டு சித்திரை விருதுகள்:முதலமைச்சர்

56 பேருக்கு புத்தாண்டு சித்திரை விருதுகள்:முதலமைச்சர்

சென்னை, பிப்.18:தமிழுக்கும், தமிழ் ஆய்வுக்கும் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் வழங்கப்படும் தமிழ்ப்புத்தாண்டு சித்திரை விருதுகள் 56 பேருக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது எனக் கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை 55 விருதுகளைத் தோற்றுவித்து அறிவித்து ஜெயலலிதா வரலாற்று சாதனைப்படைத்தார். அவர்தம் சீரிய வழியில் நல்லாட்சி புரிந்து வரும் முதலமைச்சர் கே. பழனிச்சாமி 2017 – 2018ஆம் ஆண்டில் பல்வேறு நோக்கில் பல துறை சார்ந்து தமிழுக்கு உழைத்து வரும் தமிழறிஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெயரிலும் 2018-19ஆம் ஆண்டில் தனித்தமிழ் தந்தை மறைமலையடிகளார் பெயரிலும் தமிழ்த்திரு அயோத்திதாசப்பண்டிதர் பெயரிலும் புதியதாக விருதுகளை அறிவித்தார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டில் வழங்கப்படும் விருதுகளாக மறைமலையடிகளார் விருது, அயோத்திதாசர் பண்டிதர் விருது அமைந்திருப்பதால் அதை விடுத்து 2018ஆம் ஆண்டுக்கான
சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவ்வகையில் தமிழ்த்தாய் விருது புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது புலவர் மி. காசுமானுக்கும், உ.வே.சா. விருது நடன. காசிநாதனுக்கும், கம்பர் விருது க. முருகேசனுக்கும், சொல்லின்
செல்வர் விருது ஆவடிக்குமாருக்கும், ஜி.யு.போப் விருது கு.கோ. சந்திரசேகரன் நாயருக்கும், உமறுப்புலவர் விருது பேராசிரியர் சா.நசீமாபானுவுக்கும், இளங்கோவடிகள் விருது சிலம்பொலி சு.செல்லப்பனுக்கும், அம்மா இலக்கிய விருது உலகநாயகிபழனிக்கும் ம், சிங்காரவேலர் விருதுபா. வீரமணிக்கும் மற்றும் 2017ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வை.மதன்கார்க்கிக்கும் (கார்க்கி ஆராய்ச்சி அறக்கட்டளை) வழங்கப்படவுள்ளன.

மேற்கண்ட விருதுகளில் தமிழ்த்தாய் விருது பெறும் புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கு ரூபாய் 5 லட்சம் விருதுத் தொகையுடன் பாராட்டுக் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மற்ற விருதுகள் பெறுவோருக்கு ஒரு லட்சம் உரூபாய் விருதுத் தொகையும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் பொன்னாடை மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும்.

மேலும் 2018ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*