w
Home » இந்தியா » டெல்லி ஓட்டல் விபத்து: 17 பேர் பலி

டெல்லி ஓட்டல் விபத்து: 17 பேர் பலி

புதுடெல்லி, பிப்.12: டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியின் கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. அங்கு இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ, கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

ஓட்டலில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், 9 பேர் உயிரிழந்தனர். மீட்கப்பட்டவர்களில் சிலர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சை பலனின்றி மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*