Home » சினிமா » ‘முன்னோடி’- விமர்சனம்

‘முன்னோடி’- விமர்சனம்

சித்தாராவின் மகனான ஹரீஷ் படித்து விட்டு ஊர் சுற்றுகிறார். சிறு வயது முதல் தம்பி மீது அதிகமாக அம்மா பாசம் காட்டியதால் தாயை விட்டு சற்று விலகி வாழ்கிறார். தம்பி மீதும் கோபத்துடன் இருக்கிறார். அந்த ஊரில் பெரிய ரவுடியான அர்ஜுனாவின் உயிரை காப்பாற்றியதால் அவருடனேயே தங்கி நட்பாக பழகி வருகிறார்.
இதனால் அர்ஜுனாவின் மைத்துனருக்கு ஹரீஷ் மேல் கோபம் ஏற்படுகிறது. இந்நிலையில்  புதிதாக பொறுப்பேற்றுள்ள போலீஸ் அதிகாரி ரவுடி அர்ஜுனாவை பிடிக்க நினைக்கிறார்.  நண்பர்களுடன் சுற்றி திரியும்  போது கல்லூரி மாணவியான யாமினி பாஸ்கரை பார்க்கிறார். உடனே அவர் மீது காதல் கொள்கிறார். தன் தம்பி படிக்கும் அதே கல்லூரியில் யாமினி பாஸ்கரும் படிக்கிறார். அண்ணன் காதலை சேர்த்து வைக்க தம்பி யாமினியிடம் போராடுகிறார்.  இதை பார்த்த ஹரீஷûக்கு தம்பி மீது பாசம் ஏற்படுகிறது.
ரவுடியை விட்டு விலகி குடும்பத்துடன் வாழ நினைக்கிறார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ரவுடியின் மைத்துனர் ஹரீஷை பழிவாங்க துடிக்கிறார்.  காவல்துறையும் இந்த பிரிவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.
திடீரென தம்பியை ரவுடிகள் கொலை செய்து விடுகின்றனர். இதனால் ஆத்திரமடையும் ஹரீஷ் அவர்களை பழிவாங்க துடிக்கிறார். ஹரீஷை கொல்ல தாதாவும் அவரது மைத்துனரும் முயற்சிக்கின்றனர்.

இறுதியில் ஹரீஷ் அவர்களிடமிருந்து எப்படி தப்பினார்? போலீஸ் ஹரீஷை என்ன செய்தது? போன்ற கேள்விகளுக்கு பின்பகுதியில் விடை தெரிகிறது. புதுமுகநடிகர் ஹரீஷ் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு குறும்புத்தனமாக நடித்துள்ளார்.
கதாநாயகி யாமினி பாஸ்கரும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார். தாதாவாக வரும் அர்ஜுனா மிரட்டி இருக்கிறார்.

தன்னை ரவுடிகள் கொலை செய்ய வரும் காட்சியில் சாதூரியமாக  செயல்பட்டது அனைவரையும் பாராட்ட வைக்கிறது. பிரபு சங்கர் இசையில் பாடல்கள் கவர்ந்திழுக்கிறது. பின்னணி இசையும் ஓ.கே. வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவில் படம் பளிச்சிடுகிறது.
இயக்குனர் எஸ்.பி.டி.ஏ.குமார்  தாதா கதையை குடும்ப பாசத்துடன் இணைத்து விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்.
மொத்தத்தில் ‘முன்னோடி’- விறுவிறுப்பு.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*