This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Wed Jan 23 3:35:01 2019 / +0000 GMT

சர்க்கரை கார்டுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: ஐகோர்ட்


சென்னை, ஜன.11:ரேசன் கடைகளில் சர்க்கரை மட்டுமே பெற்று வந்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வறுமைக்கோட்டிற்கும் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

இதன் மூலம் சுமார் 10 லட்சம் சர்க்கரை கார்டுகளுக்கும் ரூ.1000 ரொக்கப் பணம் கிடைக்கும். கடந்த இரண்டு நாட்களாக சர்க்கரை கார்டுகளை தவிர்த்து பச்சை நிறத்தில் உள்ள அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் வாதடுகையில், சர்க்கரை கார்டு வைத்திருப்போரும் வறுமைக்கோட்டிற்கும் கீழே உள்ளனர். எனவே அவர்களுக்கு ரூ.1000 கிடைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
Post date: 2019-01-11 09:25:11
Post date GMT: 2019-01-11 09:25:11
Post modified date: 2019-01-11 09:25:11
Post modified date GMT: 2019-01-11 09:25:11
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com