Home » அரசியல் » மீண்டும் கட்சி பணியை தொடருவேன்: டிடிவி தினகரன்

மீண்டும் கட்சி பணியை தொடருவேன்: டிடிவி தினகரன்

சென்னை, ஜூன் 3:  40 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் இன்று சென்னை வந்த டிடிவி தினகரனுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.  மீண்டும் கட்சி பணியை தொடர்வேன் என சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன் கூறியுள்ளார்.
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் ஜாமினில் வெளியான தினகரன் இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். இவரை டில்லி சென்று  செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.,க்கள் வரவேற்று அழைத்து வந்தனர். அப்போது விமான நிலையத்தில் அவரை வரவேற்க எம்பி, விஜயகுமார், உள்ளிட்ட  3 எம்எல்ஏக்கள் மற்றும் 1000க்கு மேற்பட்டோர் திரண்டு வந்து வரவேற்றனர்.
முன்னதாக டெல்லியில் தினகரன் நிருபர்களிடம் பேசுகையில்; என்னை யாரும் கட்சியில் இருந்து நீக்கியதாக தெரிவிக்கவில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொது செயலாளருக்கே  மட்டுமே உண்டு. தொடர்ந்து கட்சி பணியாற்றுவேன் .சிறையில் இருந்த காலத்தில் தமிழகத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. என்றார். அப்போது  மத்திய அரசு, மாநில அரசை அடிபணிய வைப்பதாக கூறப்படுகிறதே என்ற நிருபரின் கேள்விக்கு, பதில் கூறுகையில் யாரும் , யாருக்கும் பயப்பட தேவையில்லை. நட்பு ரீதியாகத்தான் செல்வோம் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*