w
Home » உலகம் » ஷேக் ஹசீனா கட்சி அமோக வெற்றி

ஷேக் ஹசீனா கட்சி அமோக வெற்றி

டாக்கா, டிச.27:வங்க தேச நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் ஷேக் ஹசீனாவின் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது.

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி உள்ளது.இங்கு மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில், 1,848 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். வாக்கு பதிவானது 40 ஆயிரத்து 183 மையங்களில் நடைபெற்றது.

மொத்தமுள்ள, 300 எம்.பி., தொகுதிகளில், 299-க்கு நடந்த தேர்தலில், 1,848 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரு தொகுதியில், வேட்பாளர் இறந்ததால், ஓட்டு பதிவு ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தலையொட்டி நடந்த கலவரங்களில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் ஆரம்பமானது. இந்த முறையும் பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெற்று, 4வது முறையாக ஆட்சி அரியணையில் அமருகிறார். முடிவு வெளியிடப்பட்ட 298 தொகுதிகளில் 287 தொகுதிகளை கைபற்றியுள்ள பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான, அவாமி லீக் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. முக்கிய எதிர்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி வெறும் 6 இடங்களை மட்டுமே கைபற்றியுள்ளது. வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமர் பதவியை கைப்பற்றியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*