w
Home » உலகம் » வங்கதேச தேர்தல் கலவரம் 10 பேர் காயம்

வங்கதேச தேர்தல் கலவரம் 10 பேர் காயம்

டாக்கா, டிச.30:வங்காளதேச நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.

இந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா சிட்டி கல்லூரியில் முதல் ஆளாக நின்று வாக்களித்து சென்றார். தேர்தலை முன்னிட்டு வன்முறை சம்பவங்களை தடுக்க ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 6 லட்சத்திற்கும் கூடுதலான வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*