w
Home » இந்தியா » விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள்

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள்

புதுடெல்லி, டிச.29: அடுத்தடுத்து பல சாதனைகளை புரிந்து வரும் இஸ்ரோ நிறுவனம் அடுத்த கட்டமாக மூன்று இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான ககன்யான் என்ற திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு இந்த பெருமையை இஸ்ரோ மூலம் இந்தியாவுக்கு கிடைக்க இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின விழா உரையில், 2022-ம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் என்று அறிவித்தார். இதற்காக ஏற்கனவே ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை பெறுவதற்காக ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இஸ்ரோ 3 இந்தியர்களை 7 நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த முதல் முயற்சியை நிதி ஒதுக்கப்பட்ட 40 மாதங்களுக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*