w
Home » உலகம் » பிலிப்பைன்சில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மணிலா, டிச.29: பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்தது.

சான்டோஸ் நகருக்கு கிழக்கே 193 கி.மீ. தொலைவில் பூமிக்குள்ளே 59 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதிக்கு அருகே உள்ள பசிபிக் கடற்பகுதியில் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நிலநடுக்க பகுதியில் இருந்து 300 கிமீ தொலைவிற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடற்பகுதியில் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. ஆனால், அதனை ஒட்டியுள்ள அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*