w
Home » உலகம் » போலீஸ் ஜீப் மீது துப்பாக்கி சூடு: 4 காவலர்கள் பலி

போலீஸ் ஜீப் மீது துப்பாக்கி சூடு: 4 காவலர்கள் பலி

மெக்சிகோ, டிச.27: மெக்ஸிகோவில் காவல்துறையினர் சென்ற வாகனம்மீது இளைஞர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 காவலர்கள் உயிரிழந்தனர். தலைநகர் மெக்ஸிகோ சிட்டியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சில இளைஞர்கள் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்க, அப்போது அங்கு வந்த காவல் ரோந்து வாகனத்தை நோக்கி தாங்கள் வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் நிலைதடுமாறிய வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 4 காவலர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*