w
Home » சென்னை » மேலும் 2 படத்தில் ரஜினி நடிக்கிறார்

மேலும் 2 படத்தில் ரஜினி நடிக்கிறார்

சென்னை, டிச.25:  ஜனவரி மாதம் ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மேலும் 2 படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே ரஜினி மக்கள் மன்றத்தின் வெப்சைட் சேனல் நாளை துவங்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ரசிகர்கள் சந்திப்பின் போது தான் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். 6 மாதங்களில் புதிய கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். ஆனால் கபாலி படத்தை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்தார். அதன்பிறகு 2.0 பட வேலைகளை முடித்துக்கொடுத்தார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவிற்கு ஓய்வெடுக்க சென்றுள்ள ரஜினி ஜனவரி இறுதியில் சென்னை திரும்பியதும் கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ரஜினிகாந்த் மேலும் 2 படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முருகதாஸ் இயக்கத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் ரஜினி நடிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
வினோத் கூறிய ஒரு கதை ரஜினிக்கு பிடித்துவிட அதை மேலும் டெவலப் செய்யுமாறு அவரிடம் கூறியுள்ளார்.ஆனால் தற்போது ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ள புதிய படத்தை வினோத் இயக்க உள்ளார். எனவே ரஜினி படத்தை அவர் இயக்குவது சந்தேகம் என கூறப்படுகிறது.
இதனிடையே ரஜினி மக்கள் மன்றத்தின் வெப்சைட் சேனல் நாளை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*