w
Home » Flash News » மகளுக்கு அம்பானி அளித்த கல்யாணப் பரிசு

மகளுக்கு அம்பானி அளித்த கல்யாணப் பரிசு

சென்னை, டிச.21:இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி, தனது மகளுக்கு கல்யாணப்பரிசாக 50 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான ஆடம்பர மாளிகையை வழங்கியுள்ளார்.

அதில் இஷா அம்பானி தனது கணவருடன் தனிக்குடித்தனம் தொடங்கி உள்ளார்.

இஷா அம்பானி (வயது 27), ஆனந்த் பிரமல் (வயது 33) ஆகியோரின் திருமணம் உலகமே பார்த்து வியக்கும் வண்ணம் கோலாகலமாக கடந்த வாரம் நடந்து முடிந்தது. உலக நாடுகள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய உச்சிமாநாடு போல நடந்த திருமணத்தில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர்கள் கிலாரி கிளிண்டன், ஜான் கெர்ரி, சவூதி அரேபியாவின் அமைச்சர் காலித் அல் பாலிஹ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் என ஏராளமானோர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
மணமகளுக்கு திருமணப்பரிசாக முகேஷ் அம்பானி, தெற்கு மும்பையின் ஒர்லி பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான மாளிகையை வழங்கியுள்ளார். அந்த அரண்மனை போன்ற மாளிகையில் இஷா, தனது கணவருடன் தனிக்குடித்தனம் நடத்த உள்ளார்.

அரபிக்கடலோரம், சீலிங்க் பாலத்திற்கு மிக அருகில் கம்பீரமாக எழுந்துள்ளது அந்த மாளிகை. அம்பானியின் மாளிகை , 4 லட்சம் சதுர அடியில் 27 மாடிகளைக் கொண்டதாகும். அந்த மாளிகையில் தான் குடும்பத்தினர் கலந்து கொண்ட இஷா- ஆனந்த் திருமணச் சடங்குகள் நடந்தன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*