மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=41865
Export date: Mon Mar 25 9:28:28 2019 / +0000 GMT

ஒரே நாளில் 3 படங்களை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
சென்னை, டிச.21: பிரபல நடிகர்கள் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள மாரி 2, கனா, அடங்க மறு ஆகிய 3 படங்களை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுதனமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் திரைத்துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர். நேற்று வெளியான சீதக்காதி படம் நேற்றே நெட்டில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய தமிழ் படங்கள் திரைக்கு வந்த சில நிமிடங்களிலே, இன்னும் சொல்லப்போனால் திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி வருகின்றன. அதில், மிகவும் பிரபலமான இணையதளமாக விளங்குவது தமிழ் ராக்கர்ஸ் டாட் காம் தான்.

தமிழ் ராக்கர்சை ஒழிக்க நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், அவருடைய துப்புறிவாளன் திரைப்படத்தையே ஃபுல் ஹெச்டியில் வெளியிட்டு மொத்த திரைதுறையினரையும் தமிழ் ராக்கரஸ் அதிர வைத்தது. தொடர்ந்து, ரஜினி, கமல் உட்பட அனைத்து முன்னனி நட்சத்திர திரைப்படங்களும் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் முதல் நாளிலேயே வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், இன்று வெளியான மாரி 2, அடங்க மறு, கனா உள்ளிட்ட புத்தம் புதிய படங்கள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று வெளியான சீதக்காதி திரைப்படமும் ஹெச்டியில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்ராக்கர்ஸ் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே மாரி 2 திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்றம் உட்பட அனைத்து தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி தற்போது புதிய திரைப்படங்களை தமிழ்ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது.

தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்கினாலும், மீண்டும் மீண்டும் வெவ்வேறு டொமைன்களில் தமிழ் ராக்கர்ஸ் முளைத்து வருகிறது. குறிப்பாக தற்போது சமூகவலைதளங்கள் பெருகியுள்ளதால், அதன் மூலம் நெட்டிசன்கள் தமிழ்ராக்கர்ஸின் புதிய இணையதள பக்கத்தை மிக சுலபமாக தெரிந்து பகிர்ந்து வருகின்றனர்.
Post date: 2018-12-21 09:03:11
Post date GMT: 2018-12-21 09:03:11

Post modified date: 2018-12-21 09:03:11
Post modified date GMT: 2018-12-21 09:03:11

Export date: Mon Mar 25 9:28:28 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com