w
Home » Flash News » சஜ்ஜன் குமார் மனு தள்ளுபடி

சஜ்ஜன் குமார் மனு தள்ளுபடி

புதுடெல்லி, டிச.21: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் சரண் அடைய ஒரு மாத காலம் அவகாசம் கேட்ட சஜ்ஜன் குமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த 1984-ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இதில் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சஜ்ஜன் குமார் (வயது 73) மீது வழக்கு தொடரப்பட்டது.

இதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 17-ந்தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது வாழ்நாள் முழுவதையும் அவர் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இதற்காக வருகிற 31-ந்தேதிக்குள் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்தனர்.ஆனால் இந்த வழக்கில் சரணடைவதற்கு அடுத்த மாதம் 31-ந்தேதி வரை கால அவகாசம் தருமாறு சஜ்ஜன் குமார் தரப்பில் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அவரது மøனுவை தள்ளுபடி செய்தது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*