w
Home » சென்னை » திருமகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்

திருமகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்

கும்பகோணம், டிச.17: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலை காணாமல் போன விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் திருமகள் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த புன்னைவனநாதர் சிலை காணாமல் போனதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற திருப்பணியின் போது, அங்கிருந்த புன்னைவனநாதர் கற்சிலை மாற்றப்பட்டு, அதற்குப்பதிலாக வேறுஒரு புதிய சிலை வைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.அறநிலையத்துறையில் உள்ள மூன்று இணை ஆணையர்களே திருமகளுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்திருப்பதாகச் சொல்லப்பட்டது.

அதோடு, கோயில் குருக்களிடமும் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திய திலும் திருமகள் பெயரே அடிபட்டிருக் கிறது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். அவரோடு இந்த வழக்கில் அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால், ஸ்தபதி முத்தையா ஆகியோரும் ஜாமீனுக்கு விண்ணப்பித்திருந்தனர். திருமகள் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டில் திருமகள் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது ஜாமீன் கோரி திருமகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி, தினசரி கையொழுத்திட வேண்டும் எனநிபந்தனையுடன் அவரை ஜாமீனில் விடுதலை செய்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*