w
Home » Flash News » ஜாமீனில் வந்த திருடன் மீண்டும் கைது

ஜாமீனில் வந்த திருடன் மீண்டும் கைது

சென்னை, டிச.16:வீடுகளில் தனியாக இருக்கும் பெண் களிடம் கத்தி முனையில் கொள்ளை யடிப்பதுடன் பாலியல் தொந்தரவும் அளித்து வந்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை அம்பத்தூர், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் புகுந்த மர்ம நபர், நகை பணம் ஆகியவற்றை கொள்ளை அடிப்பதுடன், அந்த பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களை நடத்துவதாகவும் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதையடுத்து, அந்த மர்ம நபரை பிடிக்க, இணை ஆணையர் விஜயகுமாரி மேற்பார்வையில் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ் பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார் பட்டரவாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்த போது, அவர் வந்த வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. மேலும் அந்த நபர் வைத்து இருந்த செல்போனை போலீசார் சோதனை செய்தபோது அதில் பாலியல் தொடர்பான வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் அறிவழகன் என்பதும், கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் பெங்களூரில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்த அறிவழகன், ஓசூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போலீசார் தேடிவந்தனர் என்றும் அதனால் கடந்த ஆண்டு அங்கிருந்து சென்னைக்கு தப்பி வந்ததும் தெரியவந்தது.

சென்னையில், வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை பகுதிகளில் நோட்டமிட்டு 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வீட்டில் தனியாக இருந்த பெண்களை மிரட்டி, அவர்களிடம் நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்ததுடன் அவர்களிடம் பாலியல் அத்துமீறல்களை செய்து அதை வீடியோ எடுத்ததுடன் அதில் ஒருசிலரை மிரட்டி நகை பணம் பறித்ததும் இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் பின்னர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

ஜாமீனில் வெளியே வந்த பின்னர் திருமுல்லைவாயலில் தங்கி இருந்ததுடன் இரு சக்கர வாகனம் ஒன்றை திருடிக் கொண்டு இரவு நேரங்களில் மீண்டும் கைவரிசை காட்ட தொடங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் புறநகர் பகுதியான ஆவடி, அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர்,கொரட்டூர், பகுதிகளில் கொள்ளையடிப்பதற்காக அங்கு உள்ள வீடுகளை நோட்டமிட்டதும் தெரியவந்தது .

ஆவடி பகுதியில் ஒரு வீட்டிற்குள் ஏறி குதித்து கொள்ளையடித்து விட்டு காட்டிவிட்டு தப்பி ஓடும் சிசிடிவி காட்சியும் காவல்துறையினரிடம் சிக்கி உள்ளது. அறிவழகனிடம் இருந்து 25 சவரன் நகை மற்றும் கொள்ளை அடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் பறிமுதல் செயதனர்.

கைது செய்யப்பட்ட அவன் போலீசாரிடம் அளித்த வாக்குமுலத்தில், பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை தேர்ந்தெடுத்து, இரவு நேரங்களில் அந்த வீடுகளின் கதவை தட்டிவிட்டு வாசல் அருகில் பதுங்கிக்கொள்வது வழக்கம் என்றும் அப்போது கதவை திறந்து வெளியே வரும் பெண்கள் கதவை தட்டியது யார் என்று பார்க்கும் நேரத்தில் அவர்களை மிரட்டி வீட்டிற்குள் அழைத்து சென்று கொள்ளையடித்ததாகவும், பின்னர் அந்த பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதுடன் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறியதாக தெரிகிறது. கடந்த 3 மாதத்தில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் நகைகளை கொள்ளையடித்ததுடன், அவர்களிடம் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலோனோர் புகார் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பிடிபட்ட அறிவழகனிடம் போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*