w
Home » அரசியல் » கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை:கமல்

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை:கமல்

சென்னை, டிச.16:கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கவில்லை என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக ஏற்கனவே செல்ல முடிவு எடுத்ததால் தற்போது வெளியூர் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவர் கருõணநிதி யின் சிலை திறப்பு விழா இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்வார் என்று செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கவில்லை என்று கூறினார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட ஏற்கனவே முடிவு செய் யப்பட்டு இருந்ததால் இன்று தான் வெளியூர் செல்வதாக அவர் தெரிவித்தார். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் சார்பில் வேறு யாரும் கலந்து கொள்கிறார்களா என்ற கேள்விக்கு இருக்கலாம் என அவர் பதில் அளித்தார்.

மேகதாது அணை தொடர்பாக விஷயத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு மிகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தினார். ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட் டால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை தவறாமல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*