w
Home » Flash News » பெர்த் டெஸ்ட்: 283 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்

பெர்த் டெஸ்ட்: 283 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்

பெர்த், டிச.16:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானதால் 43 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலியும், அஜிங்கியா ரகானாவும் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறிது நேரத்திலேயே ரகானே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி மட்டும் பொறுப்புடன் ஆடி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 25ஆவது சதத்தைப் பதிவு செய்தார்.
123 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலியை, கம்மின்ஸ் அவுட்டாக்கினார். இதை அடுத்து விளையாடிய ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் ஆகியோர் ஓரளவு மட்டுமே தாக்குப்பிடித்தனர். லியானின் பந்துவீச்சில் விக்கெட்டுகள் மளமளவென சரியவே, 283 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.

அபாரமாக பந்துவீசிய லியான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 283 ரன்களில் ஆட்டமிழந்ததால், முதல் இன்னிங்சில் இந்திய அணி 43 ரன்கள் பின் தங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

2 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 65 ரன் எடுத்திருந்தது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட்டில் தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியா வலுவாக உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*