w
Home » ஆசிரியர் பரிந்துரை » சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது

சென்னை, ஜூன் 2:  சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை ராட்சத எந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி இன்று காலை துவங்கிய போதிலும் ராட்சத இயந்தி ரத்துக்கு உயரம் எட்டாததால் மதியம் சற்று நேரம் பணி நிறுத்தப் பட்டது.
தியாகராய நகர் உஸ்மான் சாலையில் 7 மாடிகளை கொண்ட சென்னை சில்க் சில் கடந்த புதன் கிழமை அதிகாலை பற்றிய தீ நேற்று மாலை 5.45 மணி அளவில் அணைக்கப்பட்டது.
முன்னதாக நேற்று அதிகாலை 3.15 மணி அளவில் 7 மாடியில் இருந்து 4-வது மாடி வரையிலான கட்டிடம் காதை பிளக்கும் ஓசையுடன் டமார், டமார் என்று இடிந்து விழுந்தது.
இதன் பிறகு எஞ்சியுள்ள தளங்களில் தீ எரிய ஆரம்பித்தது. இந்த தீயை அணைக்கும் பணியில் 400 தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடு பட்டனர்.  தி.நகர் முழுவதும் 300 இடங்களில் தடுப்புகளை அமைக்கப்பட்டு போலீ சார் தடைகள் ஏற்படுத்தியிருந்தனர். தெற்கு உஸ்மான் சாலை முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாகவே இருந்தது. இங்கு யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று பிற்பகலே தொடங்கும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்ட போதிலும் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது. பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் ஆர்.ஜெய்சிங் நேற்று மாலை சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.  அதைத்தொடர்ந்து தடவியல் நிபுணர்களும் ஆய்வு செய்து இடிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கினர். சத்தமில்லா இடிப்பு என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எஞ்சிய பகுதிகளை தரைமட்டமாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் இதற்கான  சாதனங்கள் இல்லாததால் அவை உடனடியாக வரவழைக்கப்
பட்டது.  குறிப்பாக மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் உள்ள ‘ஜா கட்டர்’ என்ற ராட்சத எந்திரத்தை பயன்படுத்திதான் இது போன்ற கட்டிடத்தை இடிக்க முடியும். இந்த எந்திரம் உயரம் குறைந்தது என்பதால் 20 அடி உயரத்தில் மேடை அமைத்து அதற்கு மேல் இதை நிறுவ வேண்டும். தற்போது சென்னை
சில்க்ஸ் கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் இந்த மேடை அமைக்கப்படுகிறது.

சென்னை சில்க்ஸின் இடிபாடுகள் இதற்கு பயன்படுத்தப்பட்ட போதிலும் மேற்கொண்டு கூடுதலாக கட்டிட கழிவுகள் தேவைப்படுவதால் மாநகராட்சியின் 50 லாரிகள் மூலம் புறநகர் பகுதிகளில் இருந்து கட்டிட கழிவுகள் கொண்டுவரப்படுகின்றன. சுமார் 120 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
சென்னை சில்க்சை சுற்றியுள்ள தெருக்கள் குறுகலாக இருப்பதால் இந்த லாரிகள் செல்வது சிரமமாக இருக்கிறது.

இதனால் கட்டிட கழிவுகளை கொண்டுவந்து கொட்டுவதிலும் சிரமம் ஏற்பட்டது.
பின்னர் மேடை அமைக்கப்பட்டு ராட்சத எந்திரங்கள் அதன்மீது நிறுவப்பட்டன. காலை 10.30 மணி அளவில் இடிக்கும் பணி துவங்கப்பட்டது. இந்த நிலையில் 3  ஷிப்ட்  அடிப்படையில்  சுமார்  250 தீயணைப்பு படை வீரர்கள் தீயை கண்காணிப்பதிலும், அணைப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இரவு 7 மணிக்கு திடீரென 3-வது தளத்தில் தீப்பற்றியதாகவும் உடனடியாக அது அணைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
தீயணைப்பு படையின் வாகனங்கள் மற்றும் குடிநீர் வாரியத்தின் 50 லாரிகள் மூலம் இடைவிடாமல் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த லாரிகளை ஒழுங்குப்படுத்தி நிறுத்துவதில் போக்குவரத்துப் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தண்ணீர் பீய்சியடிக்கும் பணியில் இடிபாடுகளை நிரப்பி மேடை அமைக்கும் பணியும் ஒரே நேரத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. இன்று மதியத்திற்குள் 20 அடி மேடை அமைக்கப்பட்டு ஜா கட்டர் மூலம் இடிக்கும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சில்க்சின் பக்கத்து கட்டிடங்கள் அதிரும் என்பதால் மிகவும் பாதுகாப்புடன் இடிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டியது அவசியாகம். எனவே உட்புறமாகவே இடிபாடுகள் விழுவதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*