w
Home » Flash News » திமுகவுக்கு திரும்பினார் செந்தில் பாலாஜி

திமுகவுக்கு திரும்பினார் செந்தில் பாலாஜி

சென்னை, டிச.14:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமமுகவிலிருந்து விலகி இன்று மீண்டும் தாய் கழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.

கரூரை சேர்ந்தவர் முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில்பாலாஜி. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், அவரது தோழியான சசிகலாவுடனும் நல்ல நட்பு கொண்டவர். ஜெயலலிதா மறைந்த பின்னர், சசிகலா அணியில் இருந்த அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கியவுடன் அதில் ஐக்கியமானார்.

அவருக்கு மாநில அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர்

நீதிமன்றம் உத்தரவிட்டது. 18 எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யலாம் என்று கூறியதாகவும், அதை தினகரன் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிலிருந்து அமமுக நடவடிக்கைகளில் அவர் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார்.

இதற்கிடையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் கரூரில் உள்ள தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் திமுகவில் சேர முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வந்த செந்தில் பாலாஜி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில்
சேர்ந்தார். 65 நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர்.

இணைப்புக்கு பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய செந்தில் பாலாஜி, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என்று கூறினார். அதிமுக ஒரு மூழ்கும் கப்பல், இபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சி மக்கள் நலனுக்கு விரோதமானது என்று அவர் தெரிவித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*