w
Home » தமிழ்நாடு » புதுவை சட்டமன்றத்தில் நாளை சிறப்புக்கூட்டம்

புதுவை சட்டமன்றத்தில் நாளை சிறப்புக்கூட்டம்

சென்னை, டிச.13: மேகதாது அணை விவகாரம் தொடர் பாக புதுச்சேரி சட்டமன்றத்தில் நாளை சிறப்புக்கூட்டம் நடைபெற உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுடன் புதுச் சேரி அரசும் மனுத்தாக்கல் செய்து இருந்தது.

காவிரி நீரை பங்கீடுவது தொடர்பான தீர்ப்பில் காவிரியின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்கும் வகையில் புதுச்சேரி சட்ட சபையின் சிறப்புக்கூட்டம் நாளை நடைபெறும்.

மற்ற மாநிலங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கர்நாடக அரசு செயல்படக்கூடாது.
அண்டை நாடுகளில் பெட்ரோல்- டீசல் விலை குறைவாக இருக்கிறது. நம்நாட்டில் தான் வரிகள் காரணமாக இந்த விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் கோடி கிடைக்கிறது.

தினமும் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் திட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மாற்றப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*