w
Home » தமிழ்நாடு » திருவள்ளூரில் புதிய பஸ் நிலையம்:பாமக

திருவள்ளூரில் புதிய பஸ் நிலையம்:பாமக

திருவள்ளூர், டிச. 13: திருவள்ளூர் நகரில் நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலை மற்றும் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பாமக பொதுக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.
திருவள்ளூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். திருவள்ளூரில் மேற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணை பொது செயலாளர் வ.பாலயோகி தலைமை வகித்தார். மாநில அமைப்பு துணை செயலாளர் நா.வெங்கடேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இ.தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செ.பூபதி வரவேற்றார்.
கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், வடக்கு மண்டல பொறுப்பாளருமான ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு, கட்சியினர் இடையே சிறப்புரை ஆற்றினார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில்  நர்ஸ்கள், லேப்- டெக்னிஷியன்கள் பாற்றாக் குறையை போக்கி, கூடுதல் பணி யாளர்களை நியமிக்க வேண்டும்.

திருவள்ளூர் நகரில் நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். திருவள்ளூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில், வேலை வாய்ப்பில் இதே மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்து பணி வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில், நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*