w
Home » தமிழ்நாடு » திருச்சியில் வரும் 3ம்தேதி அரசு பொருட்காட்சி

திருச்சியில் வரும் 3ம்தேதி அரசு பொருட்காட்சி

திருச்சி,டிச. 13:  திருச்சி தென்னூர் பட்டாபிராமன் சாலை அருகில் உள்ள பொருள்காட்சி மைதானத்தில் தொடக்க விழா டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விழாவுக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி.என்.நடராஜன் தலைமை வகிக்கிறார். மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி வரவேற்புரை நிகழ்த்துகிறார். அரசுப் பொருள்காட்சியை தொடங்கி வைத்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விழா பேருரையாற்றுகிறார். தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி சிறப்புரையாற்றுகிறார்.விழாவில், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.நிறைவாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநர் பொ.சங்கர் நன்றி கூறுகிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*