w
Home » Flash News » சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை, டிச.13:மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் கர்நாடக அரசு மீது சட்டப்பூர்வமான நடவ டிக்கை எடுக்க வேண்டுமென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு நாள் பயணமாக மும்பை சென்றார். நேற்று பிரபல தொழிலதிபர் அம்பானியின் இல்லத்திருமண விழா வில் மனைவி லதாவுடன் அவர் கலந்துகொண்டார்.

இந்நிலையில் இன்று காலை 11.30 மணி அளவில் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டன் சென்ற அவரிடம் வீட்டு வாசலில் நிருபர்கள் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:

மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் கர்நாடக அரசு மீது சட்டப்பூர்வமான நடவடிக்கையை தமிழக அரசு மேற் கொள்ள வேண்டுமென அவர் கேட் டுக்கொண்டார்.
மேலும், 5 மாநில சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்துள்ள பிஜேபி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் தாம் ஏற்கனவே பதில் அளித்து விட்டதாக கூறிவிட்டு சென்றார். மும்பையில் நேற்று முன்தினம் இந்த கேள்விக்கு பதில் அளித்த ரஜினி மக்கள் நன்மதிப்பை பிஜேபி இழந்து விட்டது. இது பிஜேபிக்கு சரிவுதான்.இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*