w
Home » Flash News » சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது

சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது

சென்னை, டிச.13: பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக் கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, ஜெயா டிவி அலுவலகம், சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் அலுவலகங் கள், அவரது உறவினர்கள் டிடிவி தினகரன், விவேக் உள்ளிட்டோர்களின் வீடுகள் உள்பட 180க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் கைப்பற்றப் பட்ட ஆவணங்கள், சொத்துக்களின் விவரங்கள் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்தனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஏற்கனவே டிடிவி தினகரன், விவேக், கிருஷ்ணப்பிரியா உள்ளிட்டோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறையைச் சார்ந்த ஒரு பெண் அதிகாரி உள்பட 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சசிகலாவிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*