w
Home » Flash News » ரஜினிக்கு பொன்னார் ஸ்டாலின், கமல் வாழ்த்து

ரஜினிக்கு பொன்னார் ஸ்டாலின், கமல் வாழ்த்து

சென்னை, டிச.12:சூப்பர் ரஜினிகாந்த் பிறந்தநாளை யொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த்தின் 69-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவருக்கு ரசிகர்களிடமிருந்தும், திரையுலகத்தின ரிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடும் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள், அவரது நீடித்த ஆயுள் ஆரோக்கியத்துக்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பொன்னார் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிகாந்த் நலமுடன், வளமுடனும் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும். என்று கமல் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் அமிதாப்பச்சன், ‘பேட்ட’ பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட திரையுலகினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*