w
Home » சினிமா » நெட்டில் அடித்து தூக்கும் ‘விஸ்வாசம்’ பட பாடல்

நெட்டில் அடித்து தூக்கும் ‘விஸ்வாசம்’ பட பாடல்

சென்னை, டிச.11:  அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள அடிச்சிதூக்கு என்ற பாடல் நேற்று இரவு வெளியானது. பாடல் வெளியான ஒரு மணி நேரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். வீரம், வேதாளம், விவேகம் படத்திற்கு பிறகு
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில்அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் தம்பிராமைய்யா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார்.
இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் வரும் அடிச்சிதூக்கு என்ற பாடல் வரிகளின் வீடியோ நேற்று இரவு 7 மணிக்கு வெளியானது.  அடிச்சிதூக்கு பாடல் வீடியோ வெளியான ஒரு மணிநேரத்தில் அதை 20 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இதை பார்த்த சத்யஜோதி பிலிம்ஸ் அந்த சாதனையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. அடிச்சி தூக்கு பாடல் வீடியோவுக்கு கிடைத்த லைக்ஸுகளை சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் பெருமையாக பேசி வருகின்றனர்.

விவேகாவின் பாடல் வரிகளில் இமான் இசையமைத்து அவரே பாடியுள்ளது வித்தியாசமாக உள்ளதாகவும், தெளிவாகவும், கேட்க இதமாகவும் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் அஜித் படத்திற்கு முதன்முதலாக இமான் இசையமைத்துள்ளார். அவரின் இசை அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் இந்த பொங்கல் அவரது ரசிகர்களுக்கு தல பொங்கலாக அமைய உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*