w
Home » குட்றம் » தொழிலதிபர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தொழிலதிபர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தாம்பரம், டிச.11: தாம்பரம் அடுத்த பொழிச்சலூரில் தூங்கி கொண்டிருந்த ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பொழிச்சலூர், அண்ணா மெயின்ரோடு, சிவசங்கர் தெருவில் வசித்து வருபவர் கங்காசுரேஷ் (வயது 35). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் அந்த பகுதியில் மணல் விற்பனையும் செய்து வருகிறார்.

நேற்றிரவு 11 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த சுரேஷ் வீட்டில் பைக்கில் வந்த 3 மர்ம ஆசாமிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்றுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.  மேலும் இரவு நேரத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதால் தொழில் போட்டி காரணமாக யாராவத முன்விரோதத்தால் பெட்ரோல்  குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட செய்தி அறிந்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதுடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*