w
Home » சென்னை » நடு வானில் பயணியை காப்பாற்றிய டாக்டர்கள்

நடு வானில் பயணியை காப்பாற்றிய டாக்டர்கள்

சென்னை, டிச.11:  புதுடெல்லியிலிருந்து சென்னை வந்த ஏர்இந்தியா விமான பயணிக்கு நடு வானில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதே விமானத்தில் பயணம் செய்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததால் அவர் குணமடைந்தார். புதுடெல்லியிலிருந்து சென்னைக்கு ஏர் இந்திய விமானம் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் பயணிகளுக்கு விமான பணிப்பெண்கள் காபி அளித்து வந்தனர். அப்போது ஒரு பயணிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக விமானத்தின் கேப்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் விமானத்தில் செய்த அறிவிப்பை தொடர்ந்து அதே விமானத்தில் பயணம் செய்த நான்கு மருத்துவர்கள் விரைந்து வந்து அந்த பயணிக்கு சிகிச்சை அளித்தனர்.
செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டது. அரை மணி நேரத்தில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
சென்னை வந்ததும் அவர் விமானத்தின் கேப்டன் மற்றும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், விமான பணிப்பெண்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர் ஒரு தொழிலதிபர். தன்னுடைய பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*