w
Home » சென்னை » அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை, டிச.11: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக விரிவாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
தேர்தலை எவ்வாறு சந்திப்பது, வெற்றி வியூகங்களை வகுப்பது குறித்து அப்போது மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்பது குறித்தும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.அதே நேரத்தில் தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான தேர்தலை எவ்வாறு சந்திப்பது?. யார், யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம், தற்போது அந்த தொகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என ஆலோசிக்கப்பட உள்ளது.

பூத் ஏஜெண்ட் அங்கீகரிப்பதற்கான கட்சி சார்பில் வழங்கப்படும் கடிதம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக சார்பில் அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், அந்த அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் உள்ளதால் மாவட்டங்களில் தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு அதிமுக அழைக்கப்படுவது கிடையாது. இதனை அதிமுக தலைமை கோட்டை விட்டு விட்டது.
இது தொடர்பாக அதிமுக தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் புகார் அளித்தத்தன் அடிப்படையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக சார்பில் பூத் ஏஜெண்ட் நியமிக்க அதிகாரம் வழங்கி கடிதம் வழங்கப்பட உள்ளதும் குறிப்பிடதக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*