w
Home » சென்னை » ரஜினி குடும்பத்துடன் மும்பை சென்றார்

ரஜினி குடும்பத்துடன் மும்பை சென்றார்

சென்னை, டிச.11:  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் இன்று தனி விமானத்தில் மும்பை புறப்பட்டு சென்றார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அரசியல் பற்றி எதுவும் பேசாமல் படம் பற்றியும், சக நடிகர்கள் பற்றியும் பேசினார்.

மேலும் கஜா புயல் பாதிப்பிற்கு அதிக அளவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன் தனது பிறந்தநாள் அன்று  ரசிகர்கள் யாரும் வீட்டிற்கு வந்து ஏமாற வேண்டாம் என்றும், நான் ஊரில் இருக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். அதன்படி இன்று காலை தனது குடும்பத்தினருடன் தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். அங்கு சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருப்பதாகவும், நண்பர்கள் சிலரது வீட்டிற்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*