w
Home » உலகம் » பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட கொடுக்க கூடாது: ஐ.நா. தூதர்

பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட கொடுக்க கூடாது: ஐ.நா. தூதர்

நியூயார்க், டிச.10: தொடர்ந்து தீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா ஒரு டாலர் கூட கொடுக்கக் கூடாது என்று ஐ.நா.வின் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் அமைச்சரவை அந்தஸ்து பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கரான நிக்கி ஹாலே இதுபற்றி கூறியதாவது:-

அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்க விரும்பும் நாடுகளுக்கு அமெரிக்கா பணம் கொடுக்க தேவையில்லை. பின்னால் சென்று முயற்சி செய்து காரியங்கள் சாதிப்பதை நிறுத்துங்கள். நாங்கள் எந்த நாடுகளுடன் நட்புடன் இருக்கிறோம் என்ற ஒரு திட்டமிட்ட கருத்து இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

பாகிஸ்தானை பாருங்கள், நான் உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். ஒரு பில்லியன் டாலர்களை கொடுத்தாலும் அவர்கள் தீவிரவாதிகளை தொடருகிறார்கள்.

அவர்கள் எங்கள் வீரர்களை கொல்கிறார்கள். இது ஒருபோதும் சரியல்ல. அவர்கள் அதை சரிசெய்யும் வரை அவர்களுக்கு ஒரு டாலர் கூட கொடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கண்டிப்புடன் தெரிவித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*