w
Home » இன்று... » முதல் டெஸ்ட் : இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

முதல் டெஸ்ட் : இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

அடிலெய்டு, டிச.9:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் 4-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்திருந்த இந்திய அணி, ஆஸ்தி ரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் அபார பந்து வீச்சால் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

புஜாரா, ரஹானே ஆகியோரை தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். லயன் 6 விக்கெட்டுகளை அள்ளினார். நட்சத்திர பந்து வீச்சாளர் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹாசல்உட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

புஜாரா 71 ரன்களும், ரஹானே 70 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் 300-ஐ தாண்ட உதவினர். 307 ரன்களுக்கு 2-வது இன்னிங்சை இந்தியா இழந்தது. முதல் இன்னிங்சில் 15 ரன் கூடுதலாக எடுத்ததால் ஆஸ்திரேலியாவுக்கு 323 ரன் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்னுடனும் ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் சிறப்பு பந்து வீசி 4 விக்கெட்டுகளையும் பகிர்ந்துகொண்டனர். நாளை ஆட்டத்தின் கடைசி நாளாகும். ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 219 ரன் எடுக்க வேண்டும். அதன் கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளன. 5-வது நாளில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பது மிகவும் கடினம் என்பதால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு தற்போதைய நிலையில் பிரகாசமாக உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*