w
Home » சினிமா » ‘பேட்ட’ ஆடியோ விழாவில் ரஜினி முக்கிய அறிவிப்பா?

‘பேட்ட’ ஆடியோ விழாவில் ரஜினி முக்கிய அறிவிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட திரைப்படத்தின் 2-வது பாடல் நேற்று மாலை வெளியானது.  2.0 திரைப்படத்திற்குப் பிறகு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ரஜினியின் 165-வது படமாக உருவாகி உள்ளது. இதனை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், சசிகுமார், மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பேட்ட படத்தின் போஸ்டர்கள் மற்றும் முதல் பாடலான மரண மாஸ் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு, ‘ஊலாலா’ என்ற இரண்டாவது பாடல் வெளியானது.
அந்த பாடலில் எத்தன சந்தோசம் தினமும் கொட்டுது உன் மேல… நீ மனசு வச்சிபுட்டா ரசிக்க முடியும் உன்னாலா… நீ சிந்துற கண்ணீரும் நிரந்தரமில்லை… என தொடங்கும் இந்த பாடல் மாஸ் கானாவாக அமைந்துள்ளது. அனிருத்தின் இளமையான இசை இந்த பாடலுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற பாடல்களின் வெளியீட்டு விழா நாளை மாலை தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் நடைபெறுகிறது.

இதில் ரஜினிகாந்த் பங்கேற்று பேச உள்ளார். அப்போது முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவிற்காக ரஜினி ரசிகர்கள் வரவேற்பு கட்அவுட்களை அமைத்து வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*