w
Home » முக்கிய செய்தி » இந்தியா 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள்

இந்தியா 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள்

அடிலெய்டு, டிச.8:  அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான இன்று இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

அடிலெய்டுவில் நடந்து வரும் முதல் இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸி அணி 191 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து ஆடிக் கொண்டிருந்தது. அந்த அணியின் ஹெட் 61 ரன்களுடனும், ஸ்டார்க் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-ம் நாள் ஆட்டம் தொடங்கிய ஆஸ்திரேலியா 204 ரன்கள் எடுத்திருந்த போது பும்ராவின் பந்தில் ரிஷாப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து ஸ்டார்க் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த லியான் அதிரடியாக ஆடி 28 ரன்களை குவித்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா 235 ரன்கள் எடுத்திருந்த போது ஹெட் மற்றும் ஹேசில்வுட் என இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் முகம்மது சமி ஆட்டமிழக்க செய்தார். இதனால் ஆஸி அணி இந்தியாவை விட 15 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆல் அவுட்டானது.

அஷ்வின் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் சமி தலா இரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் மைதானத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடத் தொடங்கியது.

முரளி விஜய்யும், லோகேஷ் ராகுலம் களமிறங்கினர். முதலில் நிதானமாக ஆடிய ராகுல், விஜய் இணை பின்னர் அதிரடியாக விளையாட தொடங்கியது. இந்தியா 63 ரன்கள் எடுத்த நிலையில் முதலில் முரளி விஜய் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஸ்டார்க் பந்து வீச்சில் ஹேண்ட்ஸ்காம்ப்பிடம் கேட்ச் கொடுத்து 18 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ராகுல் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து நம்பிக்கை நாயகனான புஜாராவுடன் கேப்டன் கோலி களமிறங்கி ஆடி வருகின்றனர். தற்போது தேனீர் இடைவேளையின் போது புஜாரா 11 ரன்களுடனும், கோலி 2 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*