Home » தமிழ்நாடு » சொந்த ஊரில் நெல் ஜெயராமனின் உடல் அடக்கம்

சொந்த ஊரில் நெல் ஜெயராமனின் உடல் அடக்கம்

திருத்துறைப்பூண்டி, டிச.7: சென்னையில் மரணமடைந்த நெல் ஜெயராமனின் உடல் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சொந்த ஊரான கட்டிமேட்டில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ஏராளமான விவசாயிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நெல் ஜெயராமனின் உடல் நேற்று வேனில் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி சடங்கிற்கு பிறகு கட்டிமேடு கிராமத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் கிராம மக்கள், விவசாயசங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தனது நீண்ட நெடிய தேடல்கள் மூலம், மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, மைசூர் மல்லி, கிச்சடி சம்பா உள்பட சுமார் 170நீக்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த பெருமைக்குரியவர் நெல் ஜெயராமன். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி, ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக 2 கிலோ வழங்கி, அடுத்த ஆண்டில் 4 கிலோவாக பெறும் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகளை பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்ய வைத்தவர்.

அழிவின் விளிம்பில் இருந்த பாரம்பரிய நெல் ரகங்களையும், இயற்கை விவசாயத்தையும் காப்பாற்ற சிறப்பாக பங்காற்றியவர் என்ற அடிப்படையில் ஜெயராமனை, இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் நெல் ஜெயராமன் என அடையாளப்படுத்தினார்.அவரது இந்த அரிய பணிகளை சொந்த கிராம மக்கள் நினைவு கூர்ந்து அவரதுக்கு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*