Home » தமிழ்நாடு » விரைவு பேருந்துகளில் கட்டணம் குறைப்பு

விரைவு பேருந்துகளில் கட்டணம் குறைப்பு

மதுரை, டிச.7:சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் விரைவு மற்றும் குளிர்சாதன பேருந்துகளில் 10 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து மதுரை செல்லும் ஏசி சிலிப்பரில் ரூ.975ஆக இருந்த கட்டணம் ரூ.880 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து திருச்சி, பெங்களூரு, திருநெல்வேலி, தூத்துக் குடி உள்ளிட்ட வெளியூர்களுக்கு அரசு விரைவு பேருந்து கழகம் சார்பில் ஏசி சிலிப்பர், ஏசி இல்லாத எக்ஸ்பிரஸ் மற்றும் அல்ட்ரா கிளாசிக் (கழிவறை வசதி) கொண்ட பேருந்துகள் விடப் பட்டுள்ளன.

இந்த பேருந்துகளில் தனியார் ஆம்னி பஸ்களை விட 10 முதல் 15 சதவீதம் வரை அதிக கட்டணம் வசூலிக்கப் படுவதாக பயணிகள் குறை கூறினர். இதனை கருத்தில் கொண்டு திங்கள் முதல் வியாழன் வரை வாரத்தில் 4 நாட்கள் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்க முடிவு செய்யப் பட்டது.

இது குறித்து மாநில விரைவு பேருந்து கழக நிர்வாக இயக்குனர் வி.பாஸ்கரன் கூறுகையில், வார நாட்களில் ஏசி சிலிப்பர் பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு ரூ.2 என வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.1.80 ஆகவும், ஏசி அல்லாத பேருந்துகளில் இந்த கட்டணம் ரூ.1.55-ல் இருந்து ரூ.1.45ஆகவும், அல்ட்ரா கிளாசிக் பஸ்களில் இந்த கட்டணம் ரூ.1.15-ல் இருந்து ரூ.1.05 ஆகவும் குறைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

இந்த கட்டண குறைப்பு திங்கள் முதல் வியாழன் வரையிலான 4 நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். பிற 3 நாட்களிலும் மற்றும் விழாக் காலங்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண குறைப்பு மூலம் சென்னை-திருச்சி இடையே வசூ லிக்கப்பட்டு வந்த ரூ.705 கட்டணம் ரூ.635 ஆகவும், சென்னை- கீழக்கரை இடையிலான கட்டணம் ரூ.1145-ல் இருந்து 1035 ஆகவும், சென்னை-கோவை வரையிலான கட்டணம் ரூ.1080-ல் இருந்து ரூ.975 ஆகவும் குறைகிறது.

ஏசி இல்லாத பேருந்துகளில் சென்னையில் இருந்து மதுரைக்கு பழைய கட்டணம் ரூ.725 ஆகும். இந்த கட்டணம் இனி ரூ.630ஆக குறையும்.அல்ட்ரா கிளாசிக் பேருந்துகளில் சென்னை-தஞ்சை இடையே வசூலிக்கப்பட்ட ரூ.410 கட்டணம் இனி ரூ.375ஆக குறையும்.

கடந்த 6-ந் தேதியில் இருந்து கட்டண குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதம் ஏசி சிலிப்பர் பேருந்துகள் விடப்பட்டதில் இருந்தே பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*