Home » Flash News » அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி

அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி

சென்னை, டிச.7:தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனைநடத்தி வருகிறார்கள்.

இதில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு பாதுகாவலரிடம் இருந்த பணம் கைப்பற்றப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் உபகரணங்கள் வாங்கியதிலும், மருந்துகள் கொள்முதல் செய்ததிலும் முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார்கள் வந்தது. மேலும் எக்ஸ்ரே, ஸ்கேன்எடுக்க வேண்டும் நோயாளிகள், மகப்பேறு மருத்துவமனைக்கு வருபவர்கள், நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் போன்றவர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் பெற்றதாக புகார்கள் கூறப்பட்டன.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சுமார் 60 அரசு மருத்துவமனைகளில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரி பாய் மகப்பேறு மருத்துவமனை மற்றும் கடலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

மருத்துவ உபகரணங்களில் விலை விவரம், தரம் போன்றவற்றை பரிசீலித்தனர். மருந்து கொள்முதல் தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பாதுகாவலர்களிடம் சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*