Home » Flash News » தெலுங்கானா, ராஜஸ்தானில் விறுவிறு வாக்குப்பதிவு

தெலுங்கானா, ராஜஸ்தானில் விறுவிறு வாக்குப்பதிவு

ஐதராபாத், டிச.7:தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை களுக்கு நடைபெறும் தேர்தலில் விறுவிறுப் பான வாக்குப்பதிவு காணப்பட்டது.

119 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடந்தது. பகல் 1 மணி நிலவரப்படி, 40 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு ​வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அங் கும் வாக்காளர்கள் நீண்ட வரிசை யில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல்கள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளன. 5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*