Home » Flash News » ஸ்டெர்லைட் ஆலை : அரசு எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலை : அரசு எதிர்ப்பு

புதுடெல்லி, டிச.7: ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்பான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெற்றது. ஆலையை திறக்க அனுமதித்தால் ரூ.100 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்ய தயார் என ஆலை நிர்வாகம் கூறியதை ஏற்க தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய தமிழக அரசின் வழக்கறிஞர், நக்சலைட்டுகள் புகுந்ததால்தான் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது என்று ஆலை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

வன்முறையை அடக்கவே போலீஸ் துப்பாகி சூடு நடைபெற்றது என்றும் விளக்கம் அளித்தார். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெல்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என கடந்த மார்ச் மாதம் போராட்டம் நடைபெற்றது. மார்ச் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தை தொடர்ந்து ஆலை மூடப்பட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தா குழுமம் மனு தாக்கல் செய்தது.

இதன் அடிப்படையில் தீர்ப்பாயம் அமைத்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் குழு தாக்கல் செய்த அறிக்கையில் ஆலையை நிரந்தரமாக மூட முடிவு செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும், சில நிபந்தனைகள் அடிப்படையில் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப் தெரிவித்து தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஆலை கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வழக்கின் மீது இன்று இறுதி விசாரணை நடைபெற்றது. வேதாந்தா குழுமம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்வதற்கு ரூ.100 கோடி செலவிட தயார் என தெரிவித்தார்.

இந்த அடிப்படையில் மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும், நக்சலைட்டுகள் புகுந்ததால் தான் வன்முறை நடைபெற்றது என்றும் வேதாந்தா குழு வக்கீல் வாதிட்டார்.
இதற்கு தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வக்கீல் ராகேஷ்சர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆலை வளாகத்தில் எந்த பசுமையும் இல்லை என்பதையும், விதிகள் எந்த வகையில் மீறப்பட்டுள்ளன என்பதையும் விளக்கினார்.

மேலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நக்சலைட்டுகள் புகுந்தனர் என்பதை மறுத்தார். போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால்தான் துப்பாக்கி சூடு நடத்த நேர்ந்தது என வாதித்தார்.

பின்னர் வேதாந்த குழு வக்கீல் இதற்கு பதிலளித்தார். ஆலையில் அடிப்படை வசதிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். அவரது வாதம் மதியத்துடன் முடிவடைந்தது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*