Home » Flash News » தஞ்சைபெரியகோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிக்கு தடை

தஞ்சைபெரியகோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிக்கு தடை

தஞ்சை, டிச.7:புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் கட்டணம் வசூலித்து ஆன்மீக சொற்பொழிவு மற்றும் கோகா பயிற்சி அளிக்கும் ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீஸ்ரீ.ரவிசங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்,வி.சி, தி.க, தஞ்சை பெரியகோவில் மீட்பு குழு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்பாட்டம் செய்த 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்த கோர்ட் தடை விதித்துள்ளது.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் 7ம் தேதி (இன்று காலை) 5.30 மணி முதல் 8மணி வரையும், 8ம்தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையும், மாலை 5.30. மணி முதல் 8மணி வரையும் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் யோகா பயிற்சி நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த பயிற்சியில் பங்கேற்பவர்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்து வருகிறார். கட்டணம் கட்டுபவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளார்.புகழ்பெற்ற தஞ்சை கோவிலில் கட்டணம் வசூலித்து நடத்தும் ஆன்மீக பொற்பொழிவு மற்றும் யோகா வகுப்புக்கு அந்த பகுதியைச்சேர்ந்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கட்டணம் வசூல் செய்து கோவிலில் நிகழ்ச்சியை நடத்தகூடாது என்றுஸ்ரீரவிசங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி, வி. சிறுத்தை, திராவிடகழகம், தஞ்சை பெரியகோவில் மீட்பு குழு அமைப்பினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ராஜராஜசோழன் சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று தஞ்சை பெரிய கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் இந்தநிகழ்ச்சியை ரத்து செய்யவேண்டும் என்று கூறி சமூக ஆர்வலர் வெங்கட் என்பவர் மதுரை உயர்நீதின்ற கிளையில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வழக்குப்பதிவு செய்துள்ளார்.இ ந்த மனுமீதான வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது.அப்போது பெரியகோவிலில் கட்டணம் வசூல்செய்து ஆன்மீக நிகழ்ச்சி நடத்துவதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*