Home » Flash News » நடுவழியில் ரெயில்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி

நடுவழியில் ரெயில்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி

சென்னை, டிச.7:செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே இன்று காலை சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. இதனால் தென் மாவட்டங்களிலிருந்து
சென்னைக்கு வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக சென்ற ரெயில்களும் சிக்னல் கிடைக்காமல் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்தன.இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இதனைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சிக்னல் சீரமைக்கப்பட்டதையடுத்து ரெயில்கள் ஒவ்வொன்றாக
சென்னைக்கு அனுப்பப்பட்டன. அதுபோல தென் மாவட்டங்களுக்கு செல்லும் பகல்நேர ரெயில்களும் புறப்பட்டுச் சென்றன.

இந்த சிக்னல் கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரம் ரெயில்கள் தாமதமாக சென்னைக்கு வந்து சேர்ந்தன. சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*