Home » குற்றம் » தனியார் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

தனியார் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

திருத்தணி, டிச. 6:திருத்தணி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பீரோவில் இருந்த நகை, ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளைடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-திருத்தணி குமரன் நக ரைச்சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 30).இவர் திருத்தணியில் உள்ள ஒரு ஹோட்டலில் கேஷியராக பணியாற்றி வருவதால் இரவு பணிக்கு சென்று விட்டாராம்.

குருமூர்த்தியின் மனைவி வாசுகி, தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தாராம்.அப்போது கதவை மூட மறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்திக்கொண்டு மர்ம ஆசாமி ஒருவர் வாசுகி தனியாக இருப்பதை பார்த்து இரவு 1.30மணயளவில் வீட்டிற்கு புகுந்து பீரோவில் இருந்த 60 ஆயிரம் பணம், 6 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி ஆகியவற்றை எடுத்து கொண்டு வந்துள்ளான்.

அப்போது அந்த பெண் தனியாக தூங்கியதை கண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான். இதைபார்த்து திடுக்கிட்டு எழுந்த பெண் சத்தம் போடவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.அதற்குள் அவன் ஓட்டி விட்டான்.

பின்னர் பெண்ணின் கணவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் கொடுத்த புகார் தொடர்பாக திருத்தணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து வீட்டில் பெண் தனியாக இருப்பை பார்த்து அருகில் உள்ளவர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*