Home » தமிழ்நாடு » நாகை பயிர் சேதம் குறித்து ஓ.எஸ்.மணியன் ஆய்வு

நாகை பயிர் சேதம் குறித்து ஓ.எஸ்.மணியன் ஆய்வு

சென்னை, டிச.6:நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தென்னை, மா, வாழை, முந்திரி உள்ளிட்ட பயிர் சேதங்கள் குறித்து மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உயர் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை, மா, வாழை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களின் சேதம் குறித்து நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வருகை தந்துள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை இயக்கத்தின் இணைச் செயலாளர் தினேஷ்குமார், தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர் டாக்டர்.பாலசுதாஹரி, தோட்டக்கலைத்துறை ஆணையர் பி.என்.எஸ்.மூர்த்தி, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத் தலைவர் உமா ஆகியோரைக் கொண்ட குழுவினர், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் வேளாண் உற்பத்தித்துறை ஆணையர் ககன்தீப் சிங் பேடி, , தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் என்.சுப்பையன், கலெக்டர் சுரேஷ்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கோவில்பத்து, வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி உள்ளிட்ட கிராமங்களில் புயலால் சேதமடைந்துள்ள தென்னை, மா, முந்திரி, வாழை, உள்ளிட்ட தோட்டக்கலைத்துறை பயிர்கள் விவசாயிகள் வாரியாக, கிராம வாரியாக வேளாண் துறை அலுவலர்களால் கணக்கெடுக்கப்பட்டு, கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கணக்கெடுப்பு பணி நிறைவடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாய்வின் போது, இணை இயக்குநர்(வேளாண்மை) நாராயணசாமி மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*