Home » தமிழ்நாடு » எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர்,தலைவர்கள் வாழ்த்து

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர்,தலைவர்கள் வாழ்த்து

சென்னை, டிச.6:‘சஞ்சாரம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டிற்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தற்கால தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆன எஸ். ராமகிருஷ்ணன், பல சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், திரைக்கதைகளை இயற்றியுள்ளார்.

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம் ஆகிய கட்டுரை தொகுப்புகளும், எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா ஆகிய வரலாற்று நூல்களும் புகழ் பெற்றவையாகும். இவர் அட்சரம் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது சிறுகதைகள் ஆங்கிலம், பிரெஞ்ச், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு இவருக்கு சாகித்ய அகாதமி விருது அறிவித்து இருப்பது அவரின் புகழுக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது. சாகித்ய அகாதமி விருது பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தமைக்காக, எஸ். ராமகிருஷ்ணனுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*