Home » சென்னை » இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் கைது

இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் கைது

சென்னை, டிச.6:இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

நேற்று இந்திய கடலோர காவல் படையினர் ஆந்திர மாநிலம் அருகே நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கை மீனவர்கள் 5 பேர் ஒரு படகில் அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்தது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று பிற்பகல் அந்த 5 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர். அவர்களது மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலோர காவல் படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களது பெயர் ஹைக்ரோஹன் பெரைரா (வயது 57), அந்தோணி பெனாடோ புல்லி (வயது 53), வி.பி.பெரேரா (வயது 42), பெருமாள் ராஜ் (வயது 25), ஆர்.எம்.சுரேஷ்குமார் (வயது36) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களை சென்னை துறைமுகம் அழைத்து வந்து துறைமுகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் மீன்பிடி படகும் துறைமுகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*